மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. தளபதி ரசிகருக்கு ஏற்பட்ட பரிதாபம்.. பீஸ்ட் படத்திற்கு செல்லும் வழியில் நடந்த கோர விபத்து.!
பீஸ்ட் படத்தை பார்க்க சென்ற இளைஞர் கார் விபத்தில், சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் அருகாமையில் சந்தோஷ் நகரில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் கௌஷிக் (வயது 21). இவர் கல்லூரி படிப்பை பாதிலேயே நிறுத்தி, சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கௌஷிக், இவரது நண்பர் பிரித்வி, உறவினர் கனிஷ்கா மற்றும் தோழி நிவேதா, ஆகியோருடன் இன்று அதிகாலை சுங்கம் பைபாஸ் வழியாக உக்கடம் சென்றுள்ளார்.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோர தடுப்பு சுவரில் மோதி நிலைதடுமாறி கவிழ்ந்துள்ளது. அத்துடன் காரின் இடிபாடுகளுக்குள் 4 பேரும் சிக்கிய நிலையில், கவுசிக் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், மற்ற மூவரும் காயமடைந்து உதவி கேட்ட நிலையில், சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கௌசிக்கின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கௌஷிக் தீவிரமான விஜய் ரசிகர் என்பதால் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக சிறப்புக்காட்சிக்கு அதிகாலை தனது நண்பர்களுடன் சென்றபோது, விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோயம்புத்தூர் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.