திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கிரிப்டோகரன்சி மோசடி விவகாரம்; பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் அதிரடி கைது.. தஞ்சாவூரில் அதிர்ச்சி.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், பழவத்தான்கட்டளை கிராமம், விவேகானந்தர் நகரில் வசித்து வருபவர் அர்ஜுன் கார்த்திக். அப்பகுதியில் சாயி கிரிப்டோ கரன்சி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றத்தை சந்தித்த திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் பகுதியை சேர்ந்த ஷேக் அலாவுதீன், காவல் நிலையத்தில் விஷயம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கடை பகுதியை சேர்ந்த பலரும் பணம் கொடுத்து ஏமார்ந்துபோனது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அர்ஜுனின் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த பிரான்சிஸ், அவரின் மனைவி இவாஞ்சலின், பங்குதாரர் ராஜா, அவரின் மகன் செல்வகுமார் ஆகியோர் காவல்துறையினரால் கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ், பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் கார்த்திகேயன் (வயது 42) ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். நேற்று இரவு கார்த்திகேயன் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான விக்னேஷ் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்.
கார்த்தியேனனின் மீது கொலை, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நாச்சியார்கோவில் உட்பட சுற்றுவட்டார காவல் நிலையங்களில் அவரின் பெயர் ரௌடி பட்டியலிலும் உள்ளது.