மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை... அக்குபஞ்சர் மருத்துவரின் அநாகரீக செயலால் பேரதிர்ச்சி.!
18 வயதாகும் கள்ளக்காதலியின் மகளுக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்த பயங்கரம் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல், ராவுத்தாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 43). இவர் அக்குபஞ்சர் மருத்துவர் ஆவார். தஞ்சாவூரில் கிளீனிக் வைத்து நடத்துகிறார். பாலமுருகனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் மற்றும் மனைவி இருக்கின்றனர்.
இந்நிலையில், அக்குபஞ்சர் மருத்துவர் பாலமுருகனிற்கும் - தஞ்சாவூரை சேர்ந்த விதவை பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறவே, இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
மேலும், பெண்ணின் வீட்டிற்கு செல்லும் மருத்துவர் கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு 18 வயதுடைய மகள் இருக்கிறார். மருத்துவர் பாலமுருகன் கள்ளகாதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
ஒருகட்டத்திற்கு மேல் சிறுமி தாயின் கள்ளக்காதலன் தொல்லை தாங்க இயலாமல் தாயிடம் நடந்ததை கேட்டு கதறியழுதுள்ளார். இதனையறிந்து அதிர்ந்து போன தாய், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் பாலமுருகனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.