மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய் இறந்த துக்கத்தில் இருக்கையில் அமர்ந்தவாறு மாரடைப்பில் உயிரைவிட்ட மகன்.. பட்டுக்கோட்டையில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!
98 வயதான தாய் உயிரிழந்த துக்கத்தில், அவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த 68 வயது மகன் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, வெங்கடராம அய்யர் தெருவில் வசித்து வருபவர் மருத்துவர் சாம்பமூர்த்தி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தினார். சாம்பமூர்த்தியின் மனைவி மீனாட்சியம்மாள் (வயது 98). இவர்களுக்கு 5 மகன்கள் இருக்கின்றனர்.
இதில், 4 மகன்கள் திருமணம் முடிந்து வெளியூர்களில் இருக்கிறார்கள். கடைக்குட்டி மகன் ஜெயசந்திரன் (வயது 68) திருமணம் செய்யாமல் தாயுடன் இருக்கிறார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக மீனாட்சியம்மாள் இயற்கை எய்தவே, தாயின் இறப்பு மகனை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இதனால் ஜெய்சந்திரனுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி நலம் தேற்றியுள்ளனர். ஆனால், தாயின் இறப்பில் இருந்து மீளாத ஜெயசந்திரன் இன்று காலை 10:30 மணியளவில் இருக்கையில் அமர்ந்தவாறு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை அறியாத உறவினர்கள் வீட்டிற்குள் வந்து அவரிடம் பேசிக்கொண்டு இருந்த நிலையில், ஜெயசந்திரன் அசைவற்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் நடத்திய சோதனையில் ஜெய்சந்திரனின் மறைவு உறுதி செய்யப்படவே, இந்த தகவல் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.