மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சாதிமறுப்பு திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்: தஞ்சாவூரில் பேரதிர்ச்சி.. ஆணவக்கொலை?.!
காதல் திருமணம் செய்த மகளை சமாதானம் பேசி பெற்றோர் அழைத்துச்செல்ல, பெண் மர்ம மரணம் அடைந்த விவகாரம் அதிர்ச்சியை தந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்மணி ஐஸ்வர்யா. இவர் நவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் காதலுக்கு பெண்ணின் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனையடுத்து, காதல் ஜோடி கடந்த டிசம்பர் 31ம் தேதி சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளது. இதனிடையே, பெற்றோர் வீட்டிற்கு சென்ற ஐஸ்வர்யா, மர்மமாக உயிரிழந்தார்.
அவரின் மறைவில் சந்தேகம் இருப்பதாக நவீன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமாதானம் பேசி மகளை பெற்றோர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யாவின் மரணத்தில் மர்மம் நீடிப்பதால், ஆணவக்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.