மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யார் பெரிய ரௌடி?.. போட்டியில் நண்பனை கொலை செய்த பயங்கரம்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, திருச்சென்னபூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார்.
இவர் அப்பகுதியில் ரௌடி போல வலம்வந்த நிலையில், பல காவல் நிலையங்களில் இவரின் மீதான வழக்குகளும் நிலுவையில் இருந்துள்ளன.
இவரின் நண்பர்கள் கெளதம், செந்தில். நண்பர்களுக்கு இடையே வாக்குவாதமாக தொடங்கிய பிரச்சனை, பின்னாட்களில் இருதரப்பு மோதலாகியுள்ளது.
இதனால் யார் பெரிய ரௌடி என்ற பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று கெளதம் மற்றும் செந்தில் ஆகியோர் குமாரை கொலை செய்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கெளதம் மற்றும் செந்தில் கைது செய்யப்பட்டனர்.