மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாஸ்மாக் தகராறில் பாமகவினர் கைவிட்டதால் சோகம்: மாவட்ட இளைஞரணி செயலாளர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!
குடிபோதையில் தகராறு செய்து தாக்கப்பட்ட பாமக நிர்வாகிக்கு ஆதரவாக ஒருவர் கூட வரவில்லை என்பதால், மனமுடைந்துபோன நிர்வாகி தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர், சன்னாபுரம் குடியானவர் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 30). இவர் திருவிடைமருதூர் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் இருந்து வருகிறார்.
தற்போது வரை திருமணம் ஆகவில்லை. சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளவர், அதனை இயக்கி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் மது வாங்கி குடித்துள்ளார்.
போதையில், அங்கிருந்த நபர்களுக்கும்-மணிகண்டனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மணிகண்டனை சிலர் தாக்கவே, அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாமக நிர்வாகிகள் சிலருக்கு செல்போனில் தகவல் தெரிவித்திருந்த நிலையில், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியிருக்கின்றனர்.
தனது நிலையை பாமகவினர் கண்டுகொள்ளவில்லை என மனமுடைந்து போன மணிகண்டன், அங்கிருந்து திருவிடைமருதூர் இரயில் நிலையம் சென்றுள்ளார். அங்கு தஞ்சாவூர்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கும்பகோணம் ரயில்வே காவல்துறையினர், மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.