திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீட்டிலேயே பிரசவம்.. விபரீதம் செய்த தாய்.. துடிதுடித்து பறிபோன இரு உயிர்கள்.!
வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தையும், தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வந்தவர்கள் தான் செந்தில் வசந்தி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருந்துள்ளது. அந்த குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை உணவு, உடை உள்ளிட்டவற்றை கூட தர முடியாத அளவிற்கு வறுமையில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் வசந்தி ஆறாவது முறையாக கருத்தரித்துள்ளார். ஏற்கனவே ஐந்து குழந்தைகள் இருந்த காரணத்தால் வறுமையினால் மருத்துவமனைக்கு சென்றால் செலவாகிவிடும் என்று பயந்த அந்த தம்பதி வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இதனால் குழந்தை உயிரிழந்த நிலையில், சரிவர பராமரிப்பு இல்லாததால் வசந்திக்கும் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வசந்தியும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.