மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை உல்லாசமாக இருக்க அழைத்த காதலன்... தொல்லை தாங்க முடியாமல் காதலி செய்த செயலால்... நிகழ்ந்த துயரம்...!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே காந்தளவாடி கிராமத்தில் வசித்து வருபவர் செல்லதுரை (23). இவர் நெல் அறுவடை எந்திர ஓட்டுனராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி சென்னை திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, அரசூர் பாரதி நகர் அருகே இருக்கும் யோக ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருமணநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.
விசாரணையில், திருநாவலூர் அருகே இருக்கும் கோபாலகிருஷ்ணபுரம் பகுதியில் வசிக்கும் அய்யனார் மனைவி ஷர்மிளா (23) என்பவர், செல்லதுரையின் செல்போனுக்கு கடைசியாக பேசியுள்ளார் என்பது தெரியவந்தது.
ஷர்மிளாவின் திருமணத்திற்கு முன்பு செல்லதுரை அவரை காதலித்துள்ளார். காதலிக்கும் போது ஷர்மிளாவை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். ஷர்மிளாவின் திருமணத்திற்கு பிறகு செல்லதுரை அந்த வீடியோவை வைத்து மிரட்டி ஷர்மிளாவிடம் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஷர்மிளாவால் செல்லதுரையின் தொல்லை தாங்க முடியவில்லை. சம்பவத்தன்று ஷர்மிளா வீட்டிற்கு சென்ற செல்லதுரை அவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஷர்மிளா தூக்கு போட்டு சாகப் போவதாக கூறி அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார்.
இதை பார்த்த செல்லதுரை பயந்து போய் பக்கத்து அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியான ஷர்மிளா கத்தியை எடுத்து புடவை அறுத்துள்ளார். இதில் கீழே விழுந்த செல்லத்துரை பின் மண்டையில் பலத்த அடிபட்டுள்ளது.
இதை தொடர்ந்து சர்மிளா தனது நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி என்ன செய்வது என்று கேட்டுள்ளார். இதனையடுத்து சென்னையில் இருந்து வந்த மூன்று ஆண் நண்பர்களும் பைக்கில் நடுவில் செல்லதுரையின் உடலை வைத்து அரசூர் அருகேயுள்ள யோக ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, செல்லதுரை இறந்ததை சொல்லாமல் மறைத்தது, போன்ற நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஷர்மிளாவை கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த விழுப்புரம் அருகே உள்ள கீழ் முத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரத் (22), ராஜ்குமார் (22) சென்னை சேர்ந்த ஆனந்த் (20) ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.