மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியின் திருமணத்தை நிறுத்த காதலன் செய்த மோசமான செயல்.! ஒரே ஒரு புகைப்படத்தால் திருமணமே நிறுத்தம்.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பிரகாஷ். இவர், புதுரோடு பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். முத்துப்பிரகாஷ்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் அந்த பெண் முத்துப்பிரகாஷை தங்கள் வீட்டில் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். இந்தஇலையில் முத்துப்பிரகாஷ் பெண் வீட்டிற்கு சென்று அவரது தந்தையிடம் பெண்ணை திருமணம் செய்து கொடுக்குமாறு முத்துப்பிரகாஷ் கேட்டுள்ளார். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், பெண்ணின் தந்தை இவர்களது காதலை ஏற்கவில்லை.
இந்தநிலையில், அவசர அவசரமாக பெண் வீட்டார், மாப்பிள்ளையைப் பார்த்து நிச்சயதார்த்தம் நடத்தி உள்ளனர். இதுகுறித்து முத்துப்பிரகாஷிற்கு தெரியவந்ததால், இருவரும் காதலித்தபோது நெருக்கமாக இருந்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பியுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரன் முத்துப்பிரகாஷை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.