மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே!! ஒரு தென்னை மரத்திற்காக தம்பியை கொலை செய்த அண்ணன்.. பரபரப்பு சம்பவம்..!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயன் மகன் சந்திரன். மேலும் ஆஞ்சநேயரின் தம்பி சுப்பிரமணியனின் மகன் பாஸ்கர். பாஸ்கருக்கும் சந்திரனுக்கும் இடையே நிலத்தில் பாகப்பிரிவினை தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று பிரச்சனைக்குரிய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் சந்திரன் ஏரி இளநீர் வெட்டி உள்ளார். இதனைக் கண்ட பாஸ்கர் கோவப்பட்டு சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஸ்கரை சரமாரியாக குத்தியுள்ளார்.
மேலும் இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த பாஸ்கர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாஸ்கர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்துள்ளனர்.