மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்...! கர்ப்பமான தங்கை போலீசில் புகார்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பில்ராம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் ரத்தினம். இவரது மகன் மணிகண்டன் (30).
ரத்தினத்தின் இரண்டாவது மனைவி திட்டக்குடி அருகே வசிஷ்டபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதில் ஒரு மகள் இருக்கிறார். தங்கை முறையான அவரை மணிகண்டன் கடந்த 2020 முதல் மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
தற்போது அவர் நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வதாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் பிரித்தா வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தார். தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.