ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
காதல் மனைவியை கண்ட துண்டமாக்கிய கொடூர கணவன்.. பரபரப்பு சம்பவம்.!
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாரதிதாசன். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வசித்து வந்த நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்த தம்பதியினர் தனது குழந்தைகளுடன் கரூரில் வசித்து வந்துள்ளனர். இந்த சூழலில் நிஷா அவ்வப்போது பல்லடத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் பல்லடத்தில் வேலை செய்து கொண்டு அங்கேயே தங்குவதற்கு முடிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு காதல் கணவர் பாரதிதாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்த நிஷா திரும்பி தனது கணவர் வீட்டிற்கு சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் பாரதிதாசன் பல்லடம் சென்று தனது மனைவி நிஷாவை கரூர் அழைத்து செல்வதற்கு முயற்சி செய்துள்ளார் ஆனால் நிஷா அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாரதிதாசன் கட்டிய தாலியையும் கழற்றி வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாரதிதாசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காதல் மனைவி என்றும் பாராமல் சரமாரியாக நிஷாவை வெட்டிக்கொலை செய்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு விரைந்து வந்த போலீசார் பாரதிதாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.