மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரி டிரைவரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய கொடூர சம்பவம்... சேலத்தில் பரபரப்பு.,!!
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உடல் துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரியசோரகை மாட்டுக்காரன் வளவு பகுதியில் வசித்து வந்தவர் மணி. இவர் லாரி ட்ரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மணியின் மனைவி செல்போனில் அவரிடம் பேசியுள்ளார். அதன் பிறகு மணியின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை தாரமங்கலம் அருகே உள்ள கருக்குப்பட்டி பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இது குறித்து அந்த பகுதியில் இருந்த மக்கள் தாராமங்களம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தாராமங்கலம் காவல்துறையினர் மற்றும் ஓமலூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றிலிருந்த உடலை மீட்டனர்.
அப்போது, கிணற்றில் துண்டிக்கப்பட்ட இரண்டு கைகள் மற்றும் பாதி உடல் மட்டுமே கிடந்தது. காவல்துறையினர் விசாரணையில், அது காணாமல் போன லாரி டிரைவர் மணி என்பது தெரியவந்தது. அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி, கைகள், கால்கள் மற்றும் பாதி உடலை கொலையாளிகள் வேறு எங்கோ வீசிச் சென்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட மணியின் உடலின் மற்ற பகுதிகள் கிடக்கிறதா என தேடுதல் தீவிரமாக பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர், அவரது உடலை உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.