மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாயின் கண் எதிரே நடந்த கொடூரம்..4 வயது குழந்தை மூளை சிதறி பலியான அதிர்ச்சி சம்பவம்.!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் விண்டர்பேட்டை மதுரா ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வருபவர்கள் ஆசிரியரான பால்ராஜ் - மோனிஷா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் ஜோனத்தான் ராஜ் என்ற குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் இவரது மனைவி மோனிஷா தனது நான்கு வயது குழந்தையை ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு கடைக்கு கூல்டிரிங்ஸ் வாங்குவதற்காக சென்று உள்ளார். அப்போது தனது ஸ்கூட்டரை சாலையோரம் நிறுத்திவிட்டு குழந்தையை ஸ்கூட்டரில் நிற்குமாறு சொல்லிவிட்டு அங்கிருந்த கடைக்கு சென்று உள்ளார்.
அப்போது ஸ்கூட்டரில் இருந்து கீழே இறங்கிய குழந்தை கடையில் நின்று கொண்டிருந்த தாயிடம் ஓட முயற்சி செய்தபோது அந்நேரத்தில் எதிரே வந்த லாரியின் டயரில் சிக்கி தலை நசுங்கி மூளை வெளியே வந்து சம்பவ இடத்திலேயே குழந்தை துடிக்க துடிக்க பலியானது.
இதனை கண்ட குழந்தையின் தாய் மோனிஷா கதறி துடித்து அழுதுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.