மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிவேகமாக வந்த பேருந்து.. சிறுவன் மீது மோதி விபத்து.. ஆத்திரத்தில் இளைஞர்கள் செய்த வெறிசெயல்..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் - பானுமதி தம்பதியினர். இவர்களுக்கு 8 வயதில் தரணி என்ற மகன் உள்ளார். தரணி அரையாண்டு விடுமுறை காரணமாக தனது பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்காக சென்றிருக்கிறார்.
இந்நிலையில் புதன்கிழமை தனது ஊருக்கு திரும்புவதற்காக தாய் பானுமதி மற்றும் பாட்டியுடன் தரணியும் கலந்திரா கிராமத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையின் எதிர் திசையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் சாலையை கடக்க முயற்சிக்கும்போது தரணி சென்டர் மீடியனை தாண்டி சாலையின் குறுக்கே சென்றபோது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று சிறுவன் தரணி மீது வேகமாக மோதியது. இதில் சிறுவன் தரணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் ஊர் பகுதி என்று தெரிந்தும் பேருந்தை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை அங்கிருந்து இளைஞர்கள் சரமாறியாக தாக்கியும், பேருந்து கண்ணாடிகளை உடைத்தும் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் அப்பகுதி மக்களிடம் இருந்து காயமடைந்த பேருந்து ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.