"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
உல்லாச உறவுக்கு தடையாய் இருந்த குழந்தை.. ஒன்றரை வயது குழந்தைக்கு மது கொடுத்து கட்டையால் அடித்து கொன்ற தாய்..!
கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சாம்புரத்தில் சீனு என்பவர் தனது மனைவி பிரபுஷா மற்றும் இவர்களது ஒன்றரை வயது மகன் அரிஸ்டோ பியூலசுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரபுஷாவிற்க்கு காஞ்சாம்புரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் சதாம் உசேன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் பிரபுஷா தன் கணவர் சீனுவை விட்டு விலகி சதாம் உசேனுடன் அஞ்சு கிராமம் மயிலாடியில் தன் குழந்தை அரிஸ்டோ பியூலசுடன் வசித்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பிரபுஷா குழந்தை அரிஸ்டோ பியூலஸ் உடல் நலம் சரியில்லாத நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோதே குழந்தை இறந்தது. இதனையடுத்து குழந்தையின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த அஞ்சு கிராமம் காவல் துறையினர் சதாம் உசேன் மற்றும் பிரபுஷாவிடம் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்கள். இதனால் சந்தேகம் அதிகமான நிலையில் காவல்துறையினர் இருவரிடமும் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் குழந்தையின் வாயில் மதுவை ஊற்றி, கம்பால் தாக்கியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் உல்லாசமாக இருக்க குழந்தை தடையாக இருந்ததால் இருவரும் சேர்ந்து அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலிஸார் சதாம் உசேன் மற்றும் பிரபுஷா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் கள்ளக் காதலனோடு சேர்ந்து பெற்ற குழந்தைக்கு தாயே மது கொடுத்து அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.