மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணியில் இருந்த இளம் மருத்துவர் உயிரிழப்பு.. பணிச்சுமை தான் காரணமா..?
பெரம்பலூர் திமூர் பகுதியில் வசித்து வருபவர் பச்சைமுத்து. இவருக்கு மருதுபாண்டியன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்துக் கொண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் மருது பாண்டியனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது மனைவி அனிதா கூடுவாஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் பயின்று வருகிறார். மேலும் அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் மருது பாண்டியன் அறுவை சிகிச்சை ஒன்றை முடித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி அனிதா நீண்ட நேரமாக அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுக்காததால் பயந்து போன அனிதா கிண்டியில் உள்ள தனது உறவினரை அனுப்பி பார்க்க சொல்லி இருக்கிறார்.
அப்போது அவரது உறவினர் சூளைமேட்டில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது மருது பாண்டியன் இறந்த நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சூளைமேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மருது பாண்டியனின் மறைவிற்கு பணிச்சுமை தான் காரணம் என்று பலரும் கூறி வந்த நிலையில் அவரின் மறைவுக்கு பணிச்சுமை காரணம் அல்ல என்றும் அவர் தொடர்ந்து 36 மணி நேரம் பணியில் இருந்தார் என்பது முற்றிலும் தவறு என்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.