மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மரணம்.. பணிச்சுமை தான் காரணமா.?
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ராஜாராம். இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் பணிக்கு வந்த ராஜாராம் திருவானைக்காவல் அருகே பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சக காவலர்கள் அவரை உடனடியாக அழைத்துக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி உடனடியாக வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.
இதனையடுத்து ராஜாராம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜாராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பணியின் போது போக்குவரத்து காவலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.