மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுவால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு.. கணவன் எடுத்த விபரீத முடிவு.!
களக்காடு அருகே சிதம்பரபுரம் ராஜபுதூா் தெருவில் முத்துசெல்வன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து செல்வன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் முத்துசெல்வன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி முத்துசெல்வனை கோபமாக திட்டியுள்ளார். அதன் தொடர்ச்சியாக கணவன் மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முத்துசெல்வன்
திடீரென வீட்டிலிருந்த விவசாய களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனே அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியோடு ஏா்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்துசெல்வன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு விரைந்து வந்த களக்காடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கணவன் மனைவி தகராறில் கணவன் களைக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.