தஞ்சாவூரில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!



The first corono positive case at thanjavur

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளி நாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 28 நாள்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 4,961 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விமான நிலைய சுகாதார அலுவலர்கள், குடியேற்றப் பிரிவு அலுவலர்கள் தனித்தனியாக அளித்த பட்டியலில் இப்புள்ளிவிவரம் இடம்பெற்றுள்ளது.

Corono at thanjavur

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து நாடு திரும்பியவர். இவருக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் முதல் கொரோனா நோயாளி இவர் தான்.

 மேலும் லண்டனில் இருந்து காட்பாடிக்கு வந்த 49 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.