மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிகரெட்டுக்கு பணம் கேட்டதால் ஆவேசம்.. ஓட்டல் ஊழியர்களை தாக்கி போதை ஆசாமிகள் அட்டூழியம்..!
சிகரெட் வாங்கியதற்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் ஹோட்டலை சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வானியன் சாவடி ஜே.ஜே.நகர் பகுதியில் தனியார் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்த பிரியாணி கடையை கடந்த 2 ஆண்டுகளாக அஸ்புல்லா என்பவர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினத்தில் கடையை மூடிவிட்டு சென்ற பின்னர், குழந்தைக்கு பால் எடுக்க மீண்டும் 11:30 மணியளவில் கடை ஊழியர்கள் கடையை திறந்துள்ளனர்.
அந்த சமயத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் ,சிகரெட் கேட்கவே அவர்கள் சிகரெட் கொடுத்துள்ளனர். போதையிலிருந்து இளைஞர்கள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கவே, இருதரப்புககும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் இதனை கவனித்து இரண்டு கும்பலையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஹோட்டலின் உரிமையாளரான அஸ்புல்லா காவல்நிலையத்தில் சென்று வழக்கு ஏதும் வேண்டாம் என்று சமாதானம் பேசி வந்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் திடீரென மாஸ்க் அணிந்தவாறு வந்த 10 நபர்கள் பயங்கர ஆயுதங்களால் கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதோடு ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.
அத்துடன் "இந்த தெருவில் வசித்து வரும் எங்களிடமே பணம் கேட்கிறாயா? நாங்கள் உன்னை கொலை செய்துவிடுவோம்" என்று கூறி அடித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டு வருகின்றனர்.