#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட்டாகத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடிய கும்பல்.. சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானதால் பரபரப்பு.. போலீஸ் அதிரடி கைது..!
விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாகத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வானூரில் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் வெங்கடேசன் லாரி டிரைவராக உள்ளார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடத்தில் பட்டாகத்தியை கொண்டு கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் பட்டா கத்தியுடன் கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. மேலும் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் பட்டாகத்தியுடன் அப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து வீடியோ காட்சிகளின் அடிப்படையில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் பால்ராஜை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.