திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொடூரத்தின் உச்சம்.. தந்தை கண்ணெதிரே துடிக்கத் துடிக்க பலியான சிறுமி.. காப்பாற்ற முடியாமல் கதறி துடித்த தந்தை.!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவருக்கு திருமணமாகி தனுஷிகா என்ற மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜம்புலிங்கமும் அவரது மகள் தனுஷிகாவும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது எதிரே வந்த லாரி ஒன்று இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அதிபயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜம்புலிங்கம் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் தனுஷ்கா சம்பவ இடத்திலேயே தனது தந்தை கண்ணெதிரே துடிக்க துடிக்க பலியானார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஜம்புலிங்கத்தை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.