#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பகீர்..டெய்லர் கடைக்கு கக்தியோடு வந்த கணவர்.. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரி பேட்டை அருகில் உள்ள கோணசமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவருக்கு திருமணமாகி நாகபூஷ்ணம் என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.
இந்த தம்பதிகளான பழனிக்கும் நாகபுஷ்னத்திற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் நாகபூஷ்ணம் தனது தாய் வீட்டில் வசித்து வரும் நிலையில் அருகில் உள்ள பகுதியில் டெய்லர் கடை ஒன்றை வைத்தும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் டெய்லர் கடைக்கு வந்த பழனி மனைவி நாகபூஷ்ணத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பழனி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி நாகபூஷ்ணத்தை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இதனையடுத்து நாகபூஷ்னத்தின் அலறலங சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற பழனியை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ணவிசாரணை நடத்தி வருகின்றனர்.