திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உயிரிழந்த மனைவியின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுத்த கணவர்.. நெகிழ்ச்சி சம்பவம்..!
பேராவூரணியை அடுத்த வலப்பிரமன்காடு கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி மீனாகுமாரி. இவங உடல் நல குறைவால் இறந்துள்ளார்.
இந்நிலையில் மீனாகுமாரி உயிரோடு இருக்கும்போது தான் இறந்தபின் தன்னுடைய உடலை தானம் செய்ய ஆசைப்படுவதாக கூறியுள்ளார். மேலும் உடல் தானம் செய்வதற்காக பதிவும் செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து மீனாகுமாரியின் விருப்பப்படியே அவர் உயிர் இழந்ததும் அவரது இரண்டு கண்களும் லயன்ஸ் சங்கத்தினரிடம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. பின்னர் மீனாகுமாரியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல் தானம் செய்யப்பட்டால் அது கற்பித்தல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்காக பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மனைவியின் ஆசையை இறந்த பின்னும் நிறைவேற்றிய கணவரின் இந்த செயல் அந்த பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.