திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்: காதல் தகராறில் பயங்கரம்..!!
மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி பி.எஸ்.சுந்தரம் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகள் சத்திய ஸ்ரீ (21). இவர் திருப்பூர் ஜே.ஜி.நகர் பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் (21). இவர் கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கும் சத்திய ஸ்ரீக்கும் முகநூலில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சத்திய ஸ்ரீ பணியாற்றும் மருத்துவமனைக்கு வந்த நரேந்திரன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபமுற்ற நரேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்திய ஸ்ரீயின் வயிற்றில் சரமாரியாக குத்தியதுடன், அவரது கழுத்தையும் அறுத்தார். இதன் பின்னர் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதன் காரணமாக அந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்திய ஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நரேந்திரனை மீட்ட அவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதுடன் நரேந்திரன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.