பாதியில் நின்ற பஸ்: தள்ளி சென்ற மாணவிகள்..!! விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..!!
நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளிய சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் நேற்று காலை கல்லூரி மாணவிகள் சென்ற அரசு பேருந்து கேப் ரோடு பகுதியில் உள்ள பழைய தாலுக்கா அருவலகம் அருகே சென்ற போது பழுதாகி நடுவழியில் நின்றது.
இதனை தொடர்ந்து அந்த பேருந்தின் ஓட்டுனர், பேருந்தை இயக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பேருந்து இயங்கவில்லை. இதற்கிடையே கல்லூரி தொடங்கும் நேரம் நெருங்கியதால் தவித்த மாணவிகள் பேருந்தில் இருந்து இறங்கியதுடன், அதனை தள்ளி இயங்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும், ஒன்றிரண்டு ஆண்களும் கல்லூரி மாணவிகளுக்கு உதவியாக பேருந்தை தள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது தூரம் தள்ளிச் சென்ற பிறகு மீண்டும் பேருந்து இயங்க தொடங்கியது. இதையடுத்து உற்சாகமடைந்த மாணவிகள் மீண்டும் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு சென்றனர்.
மேலும் மாணவிகள் பேருந்திய தள்ளிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதை கண்ட சமூகவலைதள வாசிகள் அரசு பெருந்துகளின் நிலை குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.