மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதல் விவகாரம்.. கணவனை தீர்த்து கட்டிய மனைவி.. போலீஸ் விசாரணை..!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் கோவிந்தராஜ் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் முதற்கட்ட விசாரணையாக கோவிந்தராஜின் மனைவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது கோவிந்தராஜின் மனைவி முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது கோவிந்தராஜின் மனைவிக்கு அதே பகுதி சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கோவிந்தராஜ்க்கு தெரிய வரவே மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் சம்பவத்தன்று அவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை கண்ட கோவிந்தராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த கோவிந்தசாமி அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து கோவிந்தராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார். இதனையடுத்து கள்ளகாதல் ஜோடிகளை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.