திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவன் வீட்டில் இல்லை.. வாங்க சந்தோசமாக இருக்கலாம்..! உச்சகட்ட ஆசையில் சென்ற நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார். இவர் நியூஸ் பேப்பர் ஏஜென்டில் வேலை செய்து வருகிறார். செந்தில்குமார் கடந்த 5மாதத்துக்கு முன்பு எழும்பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது, ஆவடி பகுதியை சேர்ந்த பெர்சோனா என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி வந்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி இளம்பெண் பெர்சோனா செந்தில்குமாரை தொடர்பு கொண்டு, எனது கணவர் வீட்டில் இல்லை... நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று கூப்பிட்டுள்ளார்.
இதையடுத்து உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசையில் உடனடியாக செந்தில்குமார் தனது காரை எடுத்துக்கொண்டு அந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளார். உச்சகட்ட ஆசையில் சென்ற செந்தில்குமாருக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் பெர்சோனாவுடன் சேர்ந்து நான்கு பேர் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் செந்தில்குமாரை மிரட்டி அவரிடம் இருந்த பணம், அவர் அணிந்திருந்த 15சவரன் நகைகள் மற்றும் 2செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் செந்தில்குமாரின் கண்களை துணியால் கட்டி, காரில் ஏற்றி மதுரவாயல் பைபாஸ் சாலையில் கொண்டு சென்று இறக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். நகைகளை பறிகொடுத்த செந்தில்குமார், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் இருவரை கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கணவன், மனைவியை தேடி வருகின்றனர்.