திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மகன்களை எரித்துவிட்டு தானும் தீக்குளித்த தாய்..!!: விபரீத முடிவால் நிகழ்ந்த சோகம்
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகேயுள்ள புத்தன்வீட்டு விளை கிராமத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ் (52). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஷீபா (41). இந்த தம்பதியினருக்கு கெவின் (15), கிஷான் (7) என 2 மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் கெவின், கிஷான் இருவருக்கும் கால்களில் பக்கவாத நோய் பாதிப்பு இருந்ததாகவும் தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொண்டும் நோய் சரியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஏசுதாசுக்கும், ஷீபாவுக்கும் இடையே மகன்களின் சிகிச்சை குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிச்சலடைந்த ஏசுதாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஷீபாவின் வீட்டில் இருந்து கரும் புகையும் அதனை தொடர்ந்து காப்பாற்றுங்கள் என்ற அலறல் சத்தமும் வந்துள்ளது. இதையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஷீபாவும், அவருடைய மகன்களும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த திருவட்டார் காவல்துறையினர், அவர்கள் மூவரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இளைய மகன் கிஷான் ஏற்கனவே உயிரிந்ததாக தெரிவித்தனர். ஷீபா மற்றும் மூத்த மகன் கெவின் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.