மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்.. நலம் விசாரிக்க சென்ற தந்தை, 2 மகள்கள் .. பரிதாபமாக பலியான சம்பவம்..!
திருவள்ளூர் மாவட்டம் பெருமாள் பட்டுப் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் தர்ஷினி, தாரணி என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவால் மனோகரனின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனால் அவரைப் பார்ப்பதற்காக மனோகரன் மற்றும் அவரது இரண்டு மகள்கள் ஆகியோர் மருத்துவமனை செல்ல மின்சார ரயிலில் செல்லலாம் என்று முடிவு செய்து வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலில் சிக்கி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாயைப் பார்க்க சென்றபோது ரயிலில் அடிபட்டு தந்தை மற்றும் இரண்டு மகள்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.