ஆசிரியர்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவுகள்... திணறும் ஆசிரியர்கள்...!



The new orders given to the teachers... Teachers are stifled.

ராணிப்பேட்டையில் கடந்த வாரம் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மண்டல அதிகாரிகள் கல்வித்துறை செயலாளர் பள்ளி கல்வித்துறை ஆணையர் போன்றோர் கலந்து கொண்ட  கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகளின் அடிப்படையில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதில் அரசு பள்ளிகளில் உள்ள கழிவறை பிரச்சனை, குடிநீர் பிரச்சினை, மேலும் ஆசிரியர்களின் பற்றாக்குறை என எதைப் பற்றியும், பத்திரிகையாளர்களிடம் கூறக்கூடாது.

மேலும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மோதிரம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது. மாணவர்களை, ஆசிரியர்கள் சொந்த வேலை காரணமாக வெளிய அனுப்பக் கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளது.