மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவிக்கு உதவி செய்ய வந்த பக்கத்து வீட்டு சிறுமியை... பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்...!
மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டு வேலைகளில் உதவி செய்ய வந்த பக்கத்து வீட்டு பதினாறு வயது சென்னை பலாத்காரம் செய்துள்ளார். 50 வயது கூலி தொழிலாளி.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் வசித்து வருபவர் சேகர். இவருடைய மனைவி விஜயாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள 16 வயது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், அவரது ஓய்வு நேரங்களில் விஜயாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேகர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் சேகரை கைது செய்தனர்.