தீயில் விழுந்தும் அசராமல் எழுந்து மீண்டும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய முதியவர்: வைரலாகும் வீடியோ..!



The old man who fell into the fire and stood up without fear and stepped on the fire again

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் வரும் ஆடி மாதங்களில், மாதம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் உள்ள அம்மன் கோயில்களில் கூழ் வார்த்தல், பால்குடம் எடுத்தல், தீ மிதி திருவிழா போன்ற பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்பாக்கம் கிராமத்திலுள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி 30ஆவது ஆண்டு  ஆடி மாத தீ மிதி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த திருவிழா மூன்று நாள்கள் மிக விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு தொடங்கி மிக கோலாகலமாக நடந்தது. நேர்த்தி கடன் செலுத்த தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்ட, சுப்பிரமணி (60) என்ற முதியவர் தீ மிதித்தப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி தீயில் விழுந்தார்.

இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்த நிலையில் சுப்பிரமணி மீண்டும் எழுந்து தீ மிதித்தார். இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ அப்பகுதிகளில் வைரலாகப் பரவிவருகிறது.