கீழே கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலி! அதனை எடுத்து முதியவர் செய்த செயல்! ஒட்டுமொத்த மக்களும் பாராட்டு!



the-old-man-who-handed-over-the-gold-chain-to-the-polic

திருநெல்வேலி , பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபயிற்சிக்கு சென்ற திரு. வின்சென்ட் அங்கு யாரோ தவறி விட்டுச் சென்ற 16 கிராம் தங்க சங்கிலியை கடந்த வாரம் பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் ஒப்படைத்தார். 

திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கடந்த வாரம் வின்சென்ட் (82) என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.அப்போது 2 சவரன் தங்கச் சங்கிலி ஒன்று கீழே கிடப்பதை பார்த்துள்ளார். இதனையடுத்து தங்கச் சங்கிலியைக் கைப்பற்றிய வின்சென்ட் அதனைப் பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் ஒப்படைத்துள்ளார்.

உடனடியாக விசாரணையை துவக்கிய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி அங்கு பணிபுரியும் காவாலாளிகளிடம் யாரேனும் தனது பொருட்களை காணவில்லை என தேடி வந்தார்களா? என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நெல்லை ஜங்சன் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தங்கச் சங்கிலியைத் தவற விட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த தங்க நகை கண்ணன் என்பவரின் நகை தான என்பதை அறிய அவரிடம் உரிய முறையில் விசாரித்து அவரிடம் அந்த 16 கிராம் தங்கச் சங்கிலி ஒப்படைக்கப்பட்டது. தற்போது இருக்கும் நெருக்கடியான காலகட்டத்திலும் கூட மிக நேர்மையாக நடந்து கொண்ட வின்சென்டைப் பாராட்டிக் காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பரிசு வழங்கினார்.

மேலும் அந்த முதியவரை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். மேலும் அந்த முதியவர் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படும் போது தன் பொருள் 4 மடங்கு போய்விடும் என கூறியுள்ளார்.முதியவரின் அந்த எண்ணம் ஒட்டுமொத்த மக்களையும் பாராட்ட வைத்துள்ளது.