சேலம் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி..சேலம் விமான நிலையத்தில் மீண்டும் தொடங்க இருக்கும் விமான சேவை.!!



the-people-of-salem-rejoice-flight-service-to-resume-at

சேலம் விமான நிலையத்தில் கடந்த 3 வருடங்களாக விமான சேவை இல்லாமல் இருந்தது. கொரோனா காலத்தில் தடை செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமலே இருந்துள்ளது.

இந்நிலையில் எம்.பி.எஸ்.ஆர்.பார்த்தீபன் தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் விமான சேவையை தொடங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எம். பி. வருகின்ற 16ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Salem

இந்நிலையில் சேலத்தில் இருந்து விமான சேவையை தொடங்க இரண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மேலும் அலையன்ஸ் நிறுவனம் சார்பில் பெங்களூரில் இருந்து கொச்சினுக்கு செல்லும் விமானம் மற்றும் கொச்சினில் இருந்து பெங்களூருக்கு செல்லும் விமானம் சேலம் விமான வழித்தடம் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் பெங்களூர்-சேலம் -ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத்-சேலம்-பெங்களூர் விமானம் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் 3 ஆண்டிற்கு பிறகு சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை தொடங்கவிருப்பபதால் சேலம் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.