#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வடமாநில தொழிலாளியை தாக்கி... செல்போன் பறித்த கொள்ளை கும்பல்; போலீசார் வலைவீச்சு..!!
வடமாநில தொழிலாளியை தாக்கி, அரிவாளால் வெட்டிவிட்டு செல்போனை பறித்து சென்ற, கொள்ளை கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தாம்பரத்தில் இருக்கும் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் பீகாரை சேர்ந்த சுராஜ் குமார் (26). நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடப்பேரியை சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்த இரண்டு செல்போன்களை பறித்துள்ளனர்.
செல்போன் பறி போனதால் சுராஜ் இதனை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் சுராஜை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் சுராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான அந்த கும்பலை தேடி வருகின்றனர்.