திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொள்ளையடிக்க வந்த கும்பலை கூண்டோடு தூக்கிய போலீஸ்.. அரியலூர் அருகே பரபரப்பு..!
அரியலூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து அந்தக் காரை வழிமறித்த போலீசார் காரில் பயணம் செய்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது போலீசார் காரை சோதனை இட்டதில் அதில் பெரிய கத்திகள், இரும்பு ராடுகள், கயிறுகள் போன்றவை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரில் பயணம் செய்த அந்த கும்பலானது பொன்னேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து காரில் பயணம் செய்த பிரபாகரன், விக்னேஷ், ஹரிஷ், பிரபு, விஜய், வீரா, மாதவன் ஆகியோரை கைது செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.