திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பணியில் ஈடுபட்டிருந்த காவலர் விஷம் குடித்து தற்கொலை.!
ஈரோடு மாவட்டம் பெருந்தொழுவை அடுத்த கைகாட்டி பகுதியில் சரவணன்(32) தனது குடும்பத்தினரோடு வசித்து வந்துள்ளார். இவர் நல்லூர் காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் சரவணன் மற்றும் அவரது மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சரவணன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சரவணன் கோவில்வழி பேருந்து நிறுத்தம் அருகில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கழிவறைக்கு சென்ற சரவணன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக காவல் பணியாளர்கள் கழிவறை உள்ளே சென்று பார்த்தபோது சரவணன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக சரவணனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சரவணன் விஷமறுந்தி தற்கொலை செய்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவ குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.