மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜெபம் செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும்..! பாதிரியாரை நம்பி வந்த பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! காமக்கொடூர பாதிரியார்.!
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சலின் என்ற 42 வயது நிரம்பிய பெண் குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இவரது உறவினர் ஒருவர் ஜெபம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி அவரை தேவாலயத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கிருந்த பாதிரியார் டேவிட் என்ற 53 வயது நிரம்பிய நபர் ஏஞ்சலினுக்கு ஜெபம் செய்தார். இதனையடுத்து மீண்டும் ஜெபம் செய்வதற்கு தேவாலயத்துக்கு தனியாக வருமாறு ஏஞ்சலினிடம் பாதிரியார் கூறியதாக தெரிகிறது. அதை நம்பி அவரும் தேவாலயத்துக்கு தனியாக ஜெபம் செய்ய சென்றுள்ளார்.
அப்போது பாதிரியார் ஜெபம் செய்வதாக கூறி ஏஞ்சலினிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஏஞ்சலின் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் டேவிட்டை கைது செய்தனர்.