ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கடை போடுவதில் ஏற்பட்ட பிரச்சனை கொலையில் முடிந்த சம்பவம்.. திருச்சி அருகே பயங்கரம்..!
திருச்சி அருகே கீழதேவதானம் கிராமத்தில் வசித்து வருபவர் தனபால் - வன்னியாயி தம்பதியினர். இவர்கள் அங்குள்ள பைரவர் கோவிலுக்கு வெளியே கடை ஒன்றை அமைத்து விளக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவரும் விளக்கு விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கோவிலில் யார் முதலில் கடை போடுவது என இரு தரப்பினருக்கும் இடையே நேற்று தகராறு எழுந்துள்ளது. இந்த தகராறில் வன்னியாயின் உறவினரான மணிமாறன் என்பவர் மஞ்சுளாவின் கணவரை தாக்கியுள்ளார். இதனால் மஞ்சுளாவின் கணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தனது தந்தை தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மஞ்சுளாவின் மகன் அருண் பிரசாத் அரிவாளுடன் வன்னியாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த வன்னியாயின் கணவர் தனபாலை அருண் பிரசாத் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் தனபாலுக்கு மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் அருண் பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.