#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போதை ஆசாமிகளின் அட்டகாசம்... அரசு ஓட்டுநர் நடத்தினர் மீது தாக்குதல்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது குடிபோதையில் வந்த 3 மர்ம ஆசாமிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாண்டிச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று ஆதிவராக நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக குடிபோதையில் வந்த 3 மர்ம ஆசாமிகள் பேருந்துக்கு வழி விடாமல் இருசக்கர வாகனத்தில் பேருந்தை வழிமறித்தவாறு சென்றுள்ளனர்.
இதனையடுத்து அந்த போதை ஆசாமிகளை அரசு பேருந்து ஓட்டுனர் தட்டி கேட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமிகள் பேருந்தை வழிமறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுநரை அருகில் இருந்த மரக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.