மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண் துணைக்கு ஏங்கினேன்!!.. கொலை வழக்கில் கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்..!
சென்னை, பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (41). தனியாருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கொசப்பேட்டை சின்னத்தம்பி தெரு பகுதியை சேர்ந்தவர் பிரியா (41). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், பிரியாவுக்கு பிரகாஷீடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதன் பின்னர் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். கடந்த 8 ஆம் தேதி தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியதுடன் மது அருந்தி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
அன்று மாலை விடுதி மேலாளரை தொடர்பொ கொண்ட பிரியா, பிரகாஷ் மயங்கி விழுந்ததாகவும் மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுமாறும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அறைக்கு சென்ற மேலாளர் பரிசோதித்த போது பிரகாஷ் உயிர் பிரிந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இது குறித்து பெரிய மேடு காவல் நிலையத்திற்கு விடுதி மேலாளர் தகவல் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரியாவிடம் மேற்கொண்ட விசாரணையில், தங்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்ததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அதில் பிராகாஷ் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், பிரகாஷ் பின்தலையில் அடிபட்டு இறந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து மீண்டும் பிரியாவிடம் விசாரணை மேற்கொண்டதில், பிரகாஷிடன் ஏற்பட்ட தகராறில், அவரை பிடித்து தள்ளியதாகவும் அப்போது விழுந்த அவர் எழுந்திருக்கவில்லை என்றும் இறந்துபோனது தனக்கு தெரியாது என்றும் கூறி கதறியழுதார்.
மேலும் கணவரை பிரிந்து வாழ்ந்த பிரியா, ஆண் துணைக்கும் உல்லாசத்திற்கும் ஏங்கியதாகவும் பிரகாஷிடன் ஏற்பட்ட நெருக்கத்திற்கு பிறகு வாரம் 1 முறை அறை எடுத்து உல்லாசம் அனுபவித்ததாகவும் சம்பவத்தன்று பிரகாஷ் மீண்டும் ஒரு முறை உல்லாசத்திற்கு அழைக்க, அதில் உடன்படாத பிரியா அவரை பிடித்து தள்ளியதாகவும் அதன் பின்னர் அவர் எழுந்திருக்கவில்லை என்றும் கூறி கதறி அழுதார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர்