#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேராசை சிறை வாசலில் முடிந்த கதை.. 2 பவுன் காணாமல் போன நிலையில் 100 பவுன் என்று கூறிய பெண் கைது..!
மன்னார்குடி நெடுவாக்கோட்டையில் வசித்து வருபவர்கள் அருணாச்சலம் - லாவண்யா தம்பதியினர். இவர்கள் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று இருந்த நேரத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீடு திரும்பிய தம்பதிகள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசாரிடம் லாவண்யா தன்னிடம் இருந்த 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் முத்து ஆனந்த், ராஜமோகன், பிரபாகரன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 சவரன் தங்க நகை, ஒரு வெள்ளி விளக்கு மற்றும் இரண்டு செல்போன்கள் மட்டுமே வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் லாவண்யா காவல்துறையினரை ஏமாற்றி அலைகழித்தது தெரிய வந்ததால் லாவண்யா மீது மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவான நிலையில் லாவண்யா கைது செய்யப்பட்டார்.