திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மூதாட்டியை கடித்து குதறிய தெரு நாய்.. பலமுறை புகார் அளித்தும் கண்டுக்காத அதிகாரிகள்..!
ஆவடி அருகே பட்டாபிராம் அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வருபவர் மேரி குளோரி. இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் மேரி குளோரி நேற்று காலை பக்கத்து தெருவில் உள்ள சர்ச்சுக்கு நடந்து சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் வசிக்கும் தெருவில் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று அவரை கடிக்க பாய்ந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத மேரி குளோரி சுதாரித்துக் கொள்வதற்குள் அந்த தெருநாயானது அவரது காலை பிடித்து கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த மேரி க்ளோரியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மேரி குளோரிக்கு மருத்துவமனையில் நாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டது. மேலும் இப்பகுதியில் வெறிபிடித்த நாய்கள் அதிக அளவில் தொல்லை கொடுப்பதாக ஆவடி மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.