மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பியூட்டி பார்லர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மாணவி.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையை சேர்ந்த ரேகா சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரேகா வீட்டின் அருகே உள்ள அழகு நிலையம் சென்றுவிட்டு பின் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
மேலும் ரேகா ரயில் வருவதை கவனிக்காமல் இரயில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் ரேகா மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த திருவள்ளூா் ரயில்வே காவல் துறையினர் ரேகாவின் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து பற்றி ரேகாவின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவி இரயில் மோதி உடல் சிதறி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.