திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் திருட்டு.. இரண்டு பேர் கைது.!
சாணார்பட்டி கன்னியாபுரத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது டிராக்டரை இரவு வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அடுத்த நாள் காலை சந்தோஷ் வீட்டின் முன் இருந்த டிராக்டர் காணாமல் போய்வுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமையில் எஸ்.ஐ., சிவராசு, ஏட்டுகள் கிருபாகரன்,ஜெரால்டு ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து டிராக்டரை திருடியவர்களை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் பெரும்பாறை மஞ்சள் பரப்பு பகுதியை சேர்ந்த மருதுபாண்டி மற்றும் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ஆனந்த் மீது சந்தேகம் இருந்ததால் போலிஸார் அவர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் சந்தோஷின் டிராக்டரை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து சந்தோஷின் டிராக்டரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்களா என்று தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.