திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமணம் ஆகாத விரக்த்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. கதறும் பெற்றோர்..!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியில் சிவா மற்றும் அமிர்தா தம்பதியினர் தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன்
வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கூலி வேலை செய்து வந்த இவர்களது இரண்டாவது மகன் சரத்குமார் கடந்த சில நாட்களாகவே தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி வந்துள்ளார். ஆனால் அவருக்கு வரன் பார்த்தும் திருமணம் அமையாமல் இருந்ததால் சரத்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற சரத்குமார் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராமல் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து சரத்குமார் தனது தங்கைக்கு போன் செய்து தான் இறக்கப் போவதாக கூறியுள்ளார். மேலும் சரத்குமார் அவருடைய வாட்ஸ்அப்பில் 'நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறக்கப் போகிறேன்' என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சரத்குமாரின் இருசக்கர வாகனம் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது.
இதனால் சரத்குமார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமடைந்த சரத்குமாரின் உறவினர்கள் தீ அணைப்பு துறையினரின் உதவியோடு சரதுகுமாரின் சடலத்தை கிணற்றில் இருந்து மீட்டனர். அதன் பின் காவல் துறையினர் சரத்குமாரின் உடலை வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.