மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மழையால் விபரீதம்: கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து சிறுவன் பரிதாப பலி..!
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள கள்ளையங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தரணிதரன் (13). இவர் குறிஞ்சிப்பாடி நகரில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த தரணிதரன் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகேயுள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து தரணிதரன் மீது விழுந்தது. எதிர்பாரமல் நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த தரணிதரனை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த தரணிதரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி காவல்தூறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் கள்ளையங்குப்பம் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.